மின் உருளிகளுக்கு இனி பத்துக் கி. மீ. வேகக் கட்டுப்பாடு!

0
227

நகரின் நெரிசல் பகுதிகளில்
தானாகவே வேகம் குறையும்

பாரிஸில் எலெக்றிக் உருளிகளது
சேவைகளை வழங்குகின்ற மூன்று
நிறுவனங்கள் தங்கள் உருளிகளது
வேகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்
துள்ளன. அதன்படி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வலயங்களில்
உருளிகளை மணிக்கு பத்து கிலோ மீற்
றர்களுக்கு மேல் செலுத்த முடியாது.

வாடகைக்கு உருளிகளின் சேவையை
வழங்கிவருகின்ற “Dott”, “Lime”, “Tier”
ஆகிய நிறுவனங்களே இந்த வேகக் குறைப்பைச் செய்கின்றன. சொந்தமாக
உருளிகளைப் பயன்படுத்துவோரை
இந்த விதி கட்டுப்படுத்தாது.

பாரிஸ் நகரின் சுமார் 600 இடங்களில்
நேற்று திங்கட்கிழமை முதல் வேகக்
கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளது
இந்த இடங்களில் உருளிகளைச் செலுத்
தும்போது அவற்றின் வேகம் தானாகவே
(automatically restricted) பத்துக் கி. மீற்றர்
களாகக் குறையும்

பாரிஸ் நகர சபையின் உத்தரவை அடுத்தே இந்த வேகத் தணிப்பு நடைமுறைக்கு வருகிறது. நெடுஞ்சாலை
கள் சட்டத்தின் கீழ் 2019 இல் எலெக்றிக்
உருளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேக
எல்லை மணிக்கு 25 கிலோ மீற்றர்கள்
ஆகும்.

பாரிஸ் நகரில் trottinettes électriques
என்கின்ற மின் உருளிகளின் பாவனை
நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
அதனால் விபத்துக்களும் அடிக்கடி
நடக்கின்றன. சனப் புழக்கம் மிகுந்த
இடங்களில் அவற்றைப் பயன்படுத்து
கின்றவர்கள்-குறிப்பாக இளவயதினர்
கண்டபடி – வேகம் தணிக்காமல் –
செலுத்துவதால் பாதசாரிகள் பெரும்
அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்
என்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்
ளன.

வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதற்
கும் குறுகிய தூரங்களுக்கு இலகுவான பயணங்களைச் செய்யவும் உதவுகின்ற
இந்த எலெக்றிக் உருளிகள் இப்போது
நகரசபை நிர்வாகிகளுக்குப் பெரும்
தலையிடியாக மாறிவருகின்றன.

மின் உருளிகள் தொடர்புபட்ட விபத்துக்கள் காரணமாகக் கடந்த ஜனவரிக்குப் பிறகு மட்டும் 11பேர் உயிரிழந்துள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
16-11-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here