பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகளின் பாடல் போட்டி நேற்று 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பொண்டிப் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
மாவீரர் பொதுப் படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
போட்டியாளர்கள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர் .
நிறைவாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் போட்டி தொடர்பாக கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)