
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்தின், சேதமடைந்த பிரதான வீதி தற்காலிகமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதால், அதில் பயணிப்போர் அவதானமாகச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கான பிரதான வீதியிலுள்ள பாலம், கடந்த காலங்களில் பெய்த மழையால் சேதமடைந்தது. இதனால்,போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பாலம் தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பெய்யும் மழை காரணமாக குறித்த பாலம் மற்றும் வீதி என்பன வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மேலும் கனகாம்பிகை குளம் மற்றும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான வயல் நிலங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குறித்த வீதியை குறுக்கறுத்துப் பாய்கிறது.
இதனால், இந்தப் பாலத்தினூடாக பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.