யாழ் . குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது சிறீலங்கா இனவாத வான் படை 13.11.1993 அன்று காலை 7.30 மணிக்கு மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதலில் ஆலயத்தில் வழிபாட்டில் இருந்த 13 பேர் பலியானதுடன் இருபதற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன் ஆலயமும் பலத்த சேதமடைந்தது.
தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலின் சாட்சியாக அக் காலப் பகுதியின் பங்கு மக்களின் இதயவாலயமான இது இருந்தது.
இந்த இனவெறித் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று 13.11.2021 சனிக்கிழமை காலை இவ்வாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
யாழ்.;.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான சுப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. குரூஸ் அக்கினேஸ் – ஓய்வுபெற்றவர் – 60
02. கபிரியல் அன்ரன் – கடற்றொழில் – 48
03. அன்ரன் புஸ்பலீலா – 41
04. அன்ரன் அஞ்சலா – குடும்பப்பெண் – 40
05. அக்கினேஸ் குருசுப்பிள்ளை – 80
06. ஆரோக்கியநாதர் சில்வன் சஜீவன் – மாணவன் – 18
07. ஜோன்லூத்து சேவியர் – தொழிலாளி – 45
08. தோமஸ் பெனடிற் – கமம் – 55
09. மேரி ஜெயசீலி தாசியஸ் – வீட்டுப்பணி – 50
10. மேரிசிந்துயா மதுரநாயகம் – குழந்தை – 2.5
11. மேரிவெண்ணிலா அந்தோனிப்பிள்ளை – ஆசிரியை – 27
12. சிங்கராயர் ஜானி கனோஜி – மாணவன் – 08
13. சிங்கராசா யூஜின் காமலிற்றா – மாணவி – 15
(எரிமலையின் செய்திப் பிரிவு)