இன்றய நாள் 11.11.2021 வியாழக்கிழமை ஐரோப்பாவில் பல நாடுகளில் முதலாம் உலகப் போரின் வடுக்களை நினைவு கூரும் நாளாகவும் ,அந்த போரில் தங்கள் நாட்டிற்காக உயிர் கொடுத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நாளாகவும் உள்ளது
அந்தவகையில் பிரான்சில் இன்று தேசிய விடுமுறையோடு அனைத்து மாநகரசபைகளிலும் வணக்க நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன..
93 ம் பிராந்தியத்தின் லாக்கூர்நொவ் மாநகரசபை கல்லறையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின் நிழற்படங்களே இவையாகும்.
மாநகரசபை முதல்வர் ஜில்புஷ் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்..
எம்மவர்கள் அதிகம் வாழும் நகர்களில் லாக்கூர்நொவ் நகரும் ஒன்று என்பதும் , தமிழீழ முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் ,மற்றும் பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களதும் நினைவுத் தூபிகளும் இந்த மாநகரசபையின் அனுமதியுடன் பல ஆண்டுகளாக நிறுவப்பட்டுள்ளதோடு ,
லாச்சப்பலுக்கு அடுத்தபடியாக பல வர்த்தக நிறுவனங்களும் இந்நகரில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.