கிளிநொச்சி பரந்தன் வீதியில் ஏற்பட்ட உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

பரந்தன் ஏ9 வீதியில் சிமெந்து இறக்கிவிட்டு வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்புறமாக நேற்றுமுன்தினம் இரவு 11.40 அளவில் உந்துருளி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த குமரபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரராசா யூட்கபிசன் (வயது – 29) மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த சவுந்தானந்தன் காந்தீபன் (வயது – 39) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்