யாழ்.நீர்வேலி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஒருங்கமைத்த பிரதேசத்தின் 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டம் நடைபெற்று முடிந்து வீடு செல்லும்போது, 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்வேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.