பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.

நேற்று (06.11.2021) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான நந்தியார் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழர் கலைபண்பாட்டுக் கழக துணைப்பொறுப்பாளர் அன்ரனி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.போட்டிகளை தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்துவைைைத்தார்.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இன்று 07.11.2021 ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் மாவீரர் நினைவு சுமந்த பேச்சு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் – ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)