யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம டைந்துள்ளார் . அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ் . குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
யாழ் . நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டது . அதில் அச்சிறுவன் காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்சேர்க்கப்பட்டார் . இது தொடர்பில் யாழ் . பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டது . …. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர் புபட்டனர் என்று முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர் . இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனை வரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய் தியை பொலிஸார் வெளியிட்டமையுடன் அவர்கள் அனைவரும் 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் , அவர் கள் யாழ் . நகரம் , நாவாந்துறை , அத்தி யடி , நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந் தவர்கள் எனவும் , கைதுசெய்யப்பட்ட வர்களிடமிருந்து வாள் , கைக்கோடாரி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர் . யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் M நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங் களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து இப்படிப்பட்ட வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தி யில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .