எலிஸே மாளிகை கடும் சீற்றம்
இரு தரப்பு முறுகல் வலுக்கிறது
பிரான்ஸுடனான நீர்மூழ்கி உடன்படிக்
கையை ஆஸ்திரேலியா முறித்துக் கொள்
வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக
அதிபர் மக்ரோன் பிரதமர் மொறிசனுக்கு
அனுப்பிய குறுஞ்செய்தியை அந்நாட்டுப்
பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கிறது.
“நமக்கிடையிலான நீர்மூழ்கி விடயத்தில் நல்ல செய்தியா? அல்லது பாதகமான செய்தியா நான் எதிர்பார்க்க முடியும்? (Should I expect good or bad news for our joint submarines ambitions?”)
இவ்வாறு கேட்டு ஸ்கொட் மொறிசனுக்கு
மக்ரோன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்
றையே ஆஸ்திரேலியாவின் ” டெய்லி ரெலிகிராப்” (“Daily Telegraph”) பத்திரிகை
பிரசுரித்துள்ளது. மொறிசனுக்குத் தனிப்
பட்ட முறையில் அனுப்பப்பட்ட அந்தக்
குறுஞ்செய்தியை அவரே ஊடகத்துக்குக்
கசிய விட்டிருக்கிறார் என்று நம்பப்படு
கிறது. மக்ரோனின் செய்திக்கு மொறி
சன் பதில் அனுப்பினாரா? பதிலில் அவர் என்ன கூறினார்? போன்ற விவரங்களை
அந்தப் பத்திரிகை வெளியிடவில்லை.
நீர் மூழ்கி விவகாரத்தில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் “பொய்” கூறினார் என்பதை
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் ரோம் நகரில் வைத்து ஆஸ்திரேலிய ஊடகவி
யலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தார்.
ஜீ-20 தலைவர்களின் மாநாட்டின் போது
ஸ்கொட் மொறிசனை சந்தித்துப் பேசிய
பின்னரே மக்ரோன் செய்தியாளர்களிடம்
பேசினார்.
“நான் உங்கள் நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும் நட்புறவும்
வைத்துள்ளேன். மரியாதை என்பது எப்
போதும் இரு தரப்புகளுக்குரியது. இரு
தரப்புகளும் அந்த மதிப்புக்கு ஏற்ப நடந்து
கொள்ள வேண்டும். என்னிடம் பரந்த
தோள்கள் உள்ளன. சமாளித்துக் கொள்
வேன்” – என்று அச்சமயம் மக்ரோன் ஆஸ்
திரேலியச் செய்தியாளர் ஒருவரிடம் கூறி
யிருந்தார்.மொறிசன்” என்னிடம் பொய்
கூறினார் என்பது எனக்குத் தெரியும்” என்றும் அவர் பதிலளித்திருந்தார்.
அவரது இந்தக் கூற்றுக்குப் பதிலடியா
கவே ஆஸ்திரேலியப் பிரதமர் மொறிசன்
மக்ரோனின் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி
களைப் பத்திரிகைக்குக் கசிய விட்டிருக்
கிறார் என்று கருதப்படுகிறது.
நீர்மூழ்கி உடன்பாட்டை ஆஸ்திரேலியா
தொடர்ந்து முன்னெடுக்குமா என்ற சந்தே
கம் பிரான்ஸின் அரசுத் தலைமையிடம்
ஏற்கனவே இருந்தது என்பதைப் பகிரங்
கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே
அந்த எஸ்எம்எஸ் செய்தியை ஆஸ்திரே
லியா வேண்டும் என்றே கசிய விட்டிருக்
கிறது. இந்த விவகாரம் ஏற்கனவே முறி
ந்துபோயிருக்கும் இரு நாட்டு உறவுகள்
சீரடைவதற்கான வாய்ப்புகளைப் பறித்து
நிலைமையை மேலும் கொதி நிலைக்கு
இட்டுச் செல்வதாக அவதானிகள் கூறு
கின்றனர்.
மக்ரோனின் எஸ்எம்எஸ் கசிந்தமை தொடர்பில் பிரான்ஸ் சீற்றமடைந்துள்
ளது. ஆஸ்திரேலியா மீதான நம்பகத்
தன்மை முற்றிலுமாகச் சிதைந்து விட்டது” என்று எலிஸே மாளிகை அதிகாரி ஒருவர் பாரிஸ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
“தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களு
க்கு இடையே பரிமாறப்படுகின்ற இத்த
கைய தகவல்களைப் பகிரங்கப்படுத்
துவது முறைகேடான – நேர்மையற்ற – செயல்” என்றும் அவர் அதிருப்தியாகக்
கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் பாரிஸுடன் முன்னெ
டுத்து வந்த அணு நீர்மூழ்கி இராணுவ உடன்படிக்கையை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் திடீரென முறித்துவிட்டு அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்துடன்
இணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. ஆஸ்திரே
லியா முறைப்படி தனக்குத் தகவல் தெரி
விக்காமல் – ரகசியமாக – ஏமாற்றும் வித
மாக ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது
என்று பிரான்ஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் அந்த நடவடிக்கை
“முதுகில் குத்திய செயல்” என்று பிரான்
ஸின் வெளிவிவகார அமைச்சர் கூறியி
ருந்தார். கன்பெராவுக்கான தனது தூத
ரையும் பிரான்ஸ் திருப்பி அழைத்திருந்தது.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
02-11-2021