வடக்கில் தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் , தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர் . கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் , பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர் . இருப்பினும் , வெள்ளத்தால் , மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது . தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக , தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் , பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் . அவர்களது வீடுகளுக்குள்ளும் , மழை வெள்ளம் புகுந் துள்ளது . கடந்த காலத்தில் , நிரந்தர வீட்டுத் திட்டங்களுக்கு உள் வாங்கப்பட்டு , ஆரம்பகட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு , மிகுதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படாது , வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள் , நெருக் கடிகளைச் சந்தித்துள்ளனர் . இந்தநிலையில் , மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட் டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது . 10 அடி 6 அங்குலத்தைக் கொண்ட கனகாம்பிகைக்குளத் தில் 10 அடி 6.5 அங்குலத்துக்கு நீர் மட்டம் அதிகரித்தமையால் தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது . அதையடுத்து வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதே சங்களில் நிலைமையைச் சீர் செய்யும் பணிகளில் இரா ணு வத்தினர் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் .