கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப் போல நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் ! ஐங்கரநேசன்

0
422

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப்பலம் பெறுகின்றன . நிலத்தைக் கீறி வெளியேறி மஞ்சள் . சிவப்பு வண்ணங் களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன . நாமும் இந்தக் கார்த்திகை மாதத் தில் காந்தளின் துளிர்ப்பைப்போல , எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் விதைப்பாக மரங் களை நாட்டுவோம் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ . ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார் . வடக்கு மாகாணசபையின் தீர்மானத் துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த் திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக் கப்படுகிறது . இதனை முன்னிட்டு பொ.ஐங்கர நேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் . அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளவை வருமாறு – உலகம் என்றும் இல்லாதவாறு எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையின்மையை எதிர் கொண்டுள்ளது . கொரோனாப் பெருங்கொள்ளைநோயும் . வீறு கொண்டெழும் காலநிலை மாற்றமும் கூட்டாகத் தாக்குதலைத் தொடுத்தி ருப்பதில் நாடுகள் யாவும் நிலைகுலைந்து போயுள்ளன . ஏழை – பணக்கார நாடுகள் என்ற பேதமின்றி எல்லா நாடுகளினதும் பொருளாதாரப் பலம் ஆட்டம் கண்டு வருகின் றது . இவற்றைச் சரிவரக் கையாள இயலாத நிலையில் நாடுகளின் அரசியல் வலுவும் கேள்விக்குறியாகியுள்ளது . காட்டு விலங்குகளில் உறையும் வைர ஸூக்கள் விகாரமுற்றுத் தாக்கியதால் கொடுங் கொரோனாத் தொற்றும் . பூமி சூடாகித் தகிப்ப தால் காலநிலை மாற்றமும் ஏற்பட்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது . காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான வாழிடங்களில் இருந்து அள்ளுகொள்ளை யாகக் கடத்துவதன் மூலமும் . கரிக்காற்றை உறுஞ்சுகின்ற காடுகளைக் கணக்கின்றிக் கபளீகரம் செய்வதன் மூலமும் இப் பேரிடர் களுக்கு மனிதர்களாகிய நாமே காரணமா கியுள்ளோம் . இந்தப் பேரிடர்கள் இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழி வோம் ‘ என்ற பாடத்தை எமக்கு வலுவாகப் போதித்திருக்கும் நிலையில் . இப்போது சூழல் பாதுகாப்பினதும் மரநடுகையினதும் அவசி யம் அதிகம் உணரப்பட்டுள்ளது . நானிலம் , ஐந்திணை என்று இயற்கை யோடு இயைந்து வாழ்ந்த தமிழர்கள் மரபு வழிபாட்டைத் தமது தொல் வழிபாட்டு முறையாகக் கொண்டிருந்தவர்கள் . இறந்த வர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்து அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருந்தவர்கள் . போர்க்கால நெருக்கடிகளி லும் இயற்கையை நண்பனாக நேசித்துச் சூழல் காத்தவர்கள் . ஆனால் . இன்று பேரினத் துவ அரசியலாலும் . உலக மயமாக்கலாலும் இயற்கை வளங்களைக் காவு கொடுத்து நிற்கின்றனர் . பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப் பலம் பெறுகின்றன . நிலத்தைக் கீறி வெளியேறி மஞ்சள் . சிவப்பு வண்ணங் களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன . நாமும் இந்தக் கார்த்திகை மாதத்தில் காந்தளின் துளிர்ப்பைப்போல . எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் விதைப் பாக மரங்களை நாட்டுவோம் . ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறு வோம் ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here