எம் தேசத்தின் உன்னத தெய்வங்களான மாவீரச் செல்வங்களை வருடத்தில் ஒருநாள் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்கள் எங்கிலும் மாவீரர்களைப் பெற்றெடுத்தவர்கள் உடன்பிறந்தோர் , நண்பர்கள் தேசமக்கள் எல்லோரும் ஒன்று கூடி அந்நாளில் நெய்விளக்கேற்றி மலர்கொண்டு வழிபாடு செய்யும் காலமாகும்.
கடந்த ஆண்டுகளில் கோவிட்19 காரணமாக சுகாதார வழிமுறைகளை மதிப்பளித்து குறிப்பிட்ட மக்களுடன் அவர்களுக்கான நினைவேந்தல் அனைத்து நாடுகளிலும் செய்யப்பட்டிருந்தன. இந்த வருடம் கோவிட் தொற்று குறைவிடைந்துள்ளதால் கடந்த காலங்கள் போன்று தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப்பேணி அனைத்து மக்களையும் உள்ளடக்கி மாவீரர்நாள் 2021 எழுச்சி நிகழ்வுகள் அனைத்து நாடுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் பிரான்சிலும் பல மாநகரங்களில் வணக்க நிகழ்வுகள் வழமைபோல. நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அதன்பிரகாரம் பிரான்சில் அதிகம் மக்கள் வாழும் பாரிசின் புறநகர் பகுதி மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்ய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மண்டபம் ஏற்பாடு செய்துள்ளது. (அதன் துண்டுப்பிரசுரங்கள் மக்கள் பார்வைக்காக அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசவிடுதலைச் செயற்பாட்டாளர்களால் ஒட்டப்பட்டு வருகின்றது. இதற்கான ஒத்துழைப்பை வர்த்தகர்கள் கொடுத்து வருகின்றனர். நேற்று 93 பிரதேசத்தில் ஒட்டப்பட்ட நிழற்படங்கள்.