பிரான்ஸ் பாரிஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புற நகரங்கள் எங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்; கட்சிக்கு, தாயகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் படி, தமது உறவுகளைத் தொடர்புகொண்டு இந்தத் தேர்தலில் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய அவசியத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இன்று தேர்தல் களத்தில் தமது பாராளுமன்ற இருப்புகளைக் காப்பாற்றிக்கொள்ள பல மேடைகளில் வழமைபோல் மக்களிடம் பலவிதமான வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வழங்கிக்கொண்டு இருப்பதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். சம்பந்தன் பல மேடைகளில் விடுதலை போராளிகளை அவர்களின் போராட்டத்தை ஏளனப்படுத்தியதை நாம் அறிவோம். ஆனால், இன்று தேர்தல் மேடைகளில் அவர்களின் பேச்சுக்கள் முன்னுக்கு பின் முரணானதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம்.
இந்தச் சூழலில் தாயகத் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் ஒரு தீர்க்கமான மாற்றத்தை உருவாக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
அனைத்துலகம் எங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழீழ மக்களுக்கு அவர்கள் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்க தாயக அரசியலிலும் ஒரு பாரிய மாற்றத்தை வேண்டி அந்த மாற்றத்துக்காகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும்படி தாயக மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
: தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு