இருவேறு இராணுவ உலங்குவானூர்தி விபத்துச் சம்பவத்தில் 29 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அந்நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மானஸெரா அருகில் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 170 கிலோமீற்றரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் பாராமெ டிக்கல் ஊழியர்கள், வாகன சாரதிகள், இராணுவத்தை சேர்ந்த டாக்டர் உட்பட 12 பேர் பலியானதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானின் ஷாபுல் மாகாணத்தில் இராணுவ உலங்குவானூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் 12 இராணுவ வீரர்கள் உட் பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
“ஷாபுல் மாகாணம், ஷின் கேய் மாவட்டத்தில் உலங்குவானூர்தி விபத்தில்; சிக்கியதில் 5 உலங்குவானூர்தி ஊழியர்கள் மற்றும் 12 இராணுவ வீரர்கள் என 17 பேர் உயிரிழந்தனர்” என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீவிரவாதிகளின் ஊடுரு வலை கண்காணித்த போது இராணுவ உலங்குவானூர்தி தொழில் நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷின்கேய் மாவட்ட அதிகாரி முகமது காசிம்கான் உயிரிழப்பை உறுதிசெய்துள்ளார். உலங்குவானூர்தி விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படுகிறது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ் தானில் உள்ள இராணுவப்படை மற்றும் வெளிநாட்டு படைகளுக்கு விமான விபத்துக்கள் என்பது தொடர் பிரச்சினையாகவே உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கந்தகார் மாகாணத்தில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள் சிக்கியதில் 5 பிரிட்டன் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படைகள் வெளியேறியது. இருப்பினும் 13 ஆயிரம் வீரர்கள் அடங்கிய வெளிநாட்டு படை அங்கு தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.