பிறந்து ஓரிரு மாதங்களான குழந்தை
களில் சுவாச அழர்ச்சி நோய்(bronchiolitis) அதிகரித்து வருகிறது.பொதுவாகக் குளிர் காலத்தை அடுத்துப் பரவுகின்ற இந்த சுவாசத் தொற்று இந்த ஆண்டு நேரகாலத்துடன் வேகமாகப் பரவுவது அவதானிக்கப்பட்டுள்ளது என்று சுகா
தார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்குக் குறைந்த
குழந்தைகளின் சுற்றுவட்டத்தில் வளர்ந்
தவர்கள்-குறிப்பாக குளிர்கால நோய்த்
தொற்றுகள் உள்ளோர்-நெருங்குவதைத்
தவிர்க்குமாறு பிரான்ஸ் குழந்தை மருத்
துவ சங்கம் (French Pediatric Society) ஆலோசனை வழங்கியுள்ளது.
குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர்
கள் இருமல் சளியால் பாதிக்கப்பட்டிருப்
பின் மாஸ்க் அணியுமாறும் அறிவுறுத்தப்
பட்டுள்ளனர்.ஒன்று கூடல்கள், விழாக்
கள் மற்றும் பொது இடங்களுக்குக் கைக்
குழந்தைகளைக் கொண்டு செல்வதைத்
தவிர்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பெரு நிலப் பரப்பில் உள்ள
மொத்தம் 13 பிராந்தியங்களில் 11 பிராந்
திங்களில் சுவாச அழர்ச்சித் தொற்றுப்
பரவியுள்ளது. அதனால் குழந்தை மருத்துவமனை வார்டுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொதுவாகக் குளிர் காலப் பகுதியில்
பரவுகின்ற சுவாசத் தொற்று நோய்கள்
கொரோனா வைரஸ் சுகாதார விதிகள்
காரணமாகக் கடந்த ஆண்டில் மிகவும்
குறைந்து காணப்பட்டது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற
நடைமுறைகள் கைவிடப்பட்டுள்ளதை
அடுத்து இந்த முறை பருவகால வைரஸ்
நோய்களில் சடுதியான அதிகரிப்புக்
காணப்படுகிறது.
இதேவேளை –
தாதியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்
களது பணி விலகல் மற்றும் பணிக்குத்
திரும்பாமை காரணமாக மருத்துவமனை
களில் நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால்
ஆஸ்பத்திரிகளில் இருபது வீதமான
படுக்கைகள் மூடப்பட்டுள்ளன என்று
செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரான்ஸில் ஊதியம் போதாமை, நெருக்
கடியான பணிச் சூழல் காரணமாக மருத்
துவப் பணியாளர்கள் பதவி விலகுவது
அதிகரித்துவந்தது. கொரோனா வைரஸ்
அதனை மேலும் மோசமாக்கி உள்ளது.
2018-2021 வரையான காலப் பகுதியில்
மொத்தம் ஆயிரத்து 300 தாதியர்கள்
பணி விலகியுள்ளனர் என்று சுகாதார
அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்
திருக்கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.
27-10-2021