வவுனியாவில் கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராகத் திரண்ட தமிழர்கள்!

0
537


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் திரண்டெழுந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அனுராதபுரத்திற்குரிய பகுதியில் உள்ள மதவாச்சியில் இருந்து 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதன் மூலம் இன வீதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் அரசின் இரகசிய நகர்வை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here