வடக்கு கிழக்கை பிற மாகாணங்­களுடன் ஒப்பிட்டு பார்த்­ததாலேயே த­னித்­துவங்கள் பாதிப்­ப­டைந்­தன – சி.வி. விக்னேஸ்வரன்

0
108

vikiவடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இலங்­கையின் ஏனைய மாகா­ணங்­களில் இருந்து முற்­றிலும் வேறு­பட்­டவை. ஆனால், அதனை ஏனைய மாகாணங்களுடன் அரசாங்கம் ஒப் பிட்டு பார்த்ததாலேயே எமது தனித்துவங்கள் பாதிப்படைந்தன என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தை அபி­வி­ருத்­தி ­செய்­யப்­படும் நக­ர­மாக மாற்­று­வதில் முகங்­கொ­டுக்க வேண்­டிய சவால்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் முக­மாக நகர அபி­வி­ருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நக­ர­ அ­பி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் கூட்டம் ஒன்று முத­ல­மைச்சர் காரி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் காலை 10 மணிக்கு நடாத்­தப்­பட்­டது. அதில் உலக­ வங்­கியைச் சேர்ந்­த­ அ­தி­கா­ரி­களும் பங்­கு­ பற்­றி­யி­ருந்­தனர்.

இதன்­போது உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­த­தா­வது:-
தெற்கில் இருக்கும் 7 மாகா­ணங்­களில் இருந்து வட­கி­ழக்­கு மா­கா­ணங்கள் வேறு­பட்­டவை. மண்­ணியல் ரீதி­யா­கப் ­பார்த்தால் வட­மா­காணம் வித்­தி­யா­ச­மான ஒன்­றா­கவே இருப்­பதை அவ­தா­னிக்­கலாம். வட­மா­கா­ணத்தில் நதிகள் இல்லை. நீர் வீழ்ச்­சிகள் இல்லை. கிண­று­க­ளிலும் குளங்­க­ளிலும் இருந்­துதான் நீர் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.
அர­சியல் ரீதி­யா­க­ வ­ட­கி­ழக்­கு­ மா­கா­ணங்கள் தம­து­ த­னித்­து­வத்தை இலங்­கை ­சு­தந்­திரம் அடைந்­த ­­காலந்தொடக்கம் வெளிக்­காட்­டி­வந்­துள்­ளார்கள். எம்­மை­ பி­ற­மா­கா­ணங்­க­ளுடன் சேர்த்துப் பார்த்­ததால் எம­து ­த­னித்­துவம் பாதிப்­ப­டைந்­தது. 1987ஆம் ஆண்டு இந்­தி­யாவின் உத­வி­யுடன் 13ஆம் திருத்தச் சட்டம் வட­கி­ழக்­கு­மா­காண மக்­க­ளுக்­கா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டது.
ஆனால், மாகா­ண­ ச­பை­களை நாடு ­மு­ழு­வதும் ஏற்­ப­டுத்தி எமது தனித்­து­வத்தை நிலை­பெறச் செய்­யாமல் பாதிப்­புக்குள்­ளாக்கி வந்­துள்­ளன. தொடர்ந்­து­வந்த இலங்­கை ­அ­ர­சாங்­கங்கள். 13ஆம் திருத்தச் சட்­டத்தின் கீழ் தரப்­பட்ட குறை­வான உரித்­துக்­களைக் கூட மகா­வலி அதி­கார சபை, நக­ர­ அ­பி­வி­ருத்தி அதி­கார சபை போன்ற மத்­தி­ய­ அ­ர­சாங்­கத்தின் அதி­கா­ர­ ச­பை­க­ளுக்கு ஊடாக அர­சாங்­கத்­தினர் பிரித்­தெ­டுத்­துள்­ளனர்.

அவ்­வா­றான ஒரு­செ­யற்­றிட்­டத்தைப் போலவே இதையும் காண்­கின்றோம். எம்­மு டன் கலந்­தா­லோ­சித்து எமக்­கான நக­ர­ அ­பி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­தாமல் மத்­தி­ய­ அ­ர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மாக இங்கு தமக்­கேற்­ற­வாறு ஏற்­பா­டு­களை நடாத்­தி­வ­ரு­கின்­றது. என்று நான் கரு­து­கின்றேன். இதனை நாம் ஏற் றுக் கொள்­ள­மு­டி­யாது. எமக்­கா­ன­ அ­பி­வி­ருத்­தி­யை­ நாமே உரு­வாக்க வச­திகள் அளிக்­கப்­பட­ வேண்டும்.

சரித்­தி­ர­ ரீ­தி­யா­கவும் நாங்கள் வேறு­பட்­ட­வர் கள். 2000 வரு­டங்­க­ளுக்­கு­ மே­லா­ன­ ச­ரித்­தி­ரத் தைக் கொண்­ட­வர்கள் எம் மக்கள். தற்­பொ­ழுது­ போ­ரினால் பாதிக்­கப்­பட்­ட­ ஒ­ரு ­பி­ர­தே­ச­மா­க­வ­ட­மா­காணம் உள்­ளது. காலி கண்­டி­ போன்ற இடங்­க­ளை­ அ­பி­வி­ருத்­தி­ செய்­வ­தற்கும் வட­மா­கா­ணத்­தை ­அ­பி­வி­ருத்­தி­ செய்­வ­தற்கும் இடையில் பல­ வே­று­பா­டுகள் இருப்­பதை அவ­தா­னிக்­க­வேண்டும்.
அதா­வது, முதலில் எம­து ­பி­ர­தேசம் இயல் ­பா­ன­ நி­லைக்­கு கொண்­டு­வ­ரப்­ப­ட ­வேண்டும். கண்­டி­, ­கா­லி­ போன்­ற ­மற்­றைய இரண்டு­ ந­க­ ரங்­களும் அபி­வி­ருத்­தி­ அ­டைந்­த­ ந­க­ரங் கள். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் மத்­தி­ய­ அ­ர­சி னால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­ ஒ­ரு­ பி­ர­தே­ச­மே­ எ­ம­து­ பி­ர­தே­சம்­ என்­ப­தை­க் உ­ண­ர­வேண்டும்.

பொரு­ளா­தா­ர­ ரீ­தி­யா­கவும் எமது மாகாணம் சற்று வேறுபட்டது. எம்மைப் பொறுத்த வரையில் விவசாய அடிப்படையிலான பொருளாதார விருத்தியையே நாங்கள் நாடி நிற்கின்றோம். சிறிய இடைநிலைதொழில் முயற்சிகளில் ஈடுபடவே நாங்கள் விரும்புகின் றோம். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற்பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை.

மேலும் சுற்றுலாத்துறை போன்றவை எமது பாரம்பரியம், கலாசாரம், இயற்கை வளங்கள் சுற்றாடல் போன்றவற்றிற்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here