யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் சுமார் 7 இடங்கள் யாழ்.மேல் நீதிமன்றத்தால் அடையாளமிடப்பட்டுள்ளன. குருநகர், கொழும்புத்துறை, ஓட்டுமடம், பொம்மைவெளி, யாழ் நகரப் பகுதி, ஆரியகுளச் சந்தி, கோட்டைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பூங்கா ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் வியாபாரங்கள் கூடிய ஆதிக்கம் செலுத்துவதாக யாழ். மேல் நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது குடாநாட்டில் போதைவஸ்து வியாபாரங்களும் பாவனைகளும் அதிகரித்து வருவதாக பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையில் இவ்விடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை போதைப்பொருள் பாவனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸாரும் பொது அமைப்புக்களும் முன்னெடுத்துவருகின்றன.
போதைப் பொருள் பாவனை, விற்பனை தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்களுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கி அவற்றைக் குறைப்பதற்கு ஆவன செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.