போக்குவரத்து விதிகளை மீறுகின்ற
சாரதிகள் தங்கள் உரிமத்தில் புள்ளி
களை (points) இழக்கிறார்கள்.அதனை
மீளப் பெறுவதற்கு அபராதத்துடன் கால விரையத்தையும் எதிர்கொள்கிறார்கள்.
பிரான்ஸில் அமுலில் உள்ள சாரதி
அனுமதிப் பத்திர நடைமுறை இது.
பிரெஞ்சு மொழியில் le permis à points
எனப்படுகின்ற இந்த லைசென்ஸ் நடை
முறையை அரசினால் திட்டமிடப்பட்ட
ஒரு “நிதி மோசடி” என்று சாடியுள்ளார்
எரிக் செமூர். அதனை ரத்துச் செய்ய
விரும்புகிறார் என்றும் தொலைக் காட்சி
நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியிருக்கின்
றார்.
வீதி விபத்துகளில் உயிரிழப்புகள் குறை
வடைந்தமைக்கு இந்தப் புள்ளிகள் அடங்
கிய லைசென்ஸ் காரணமல்ல. நவீன
கார்களது தரமும் ஆசனப் பட்டிகளுமே
(seat belts) காரணம் என்றும் அவர் வாதி
ட்டுள்ளார். போக்குவரத்துக் குற்றங்கள்
அபராதத்தினால் மாத்திரமே தண்டிக்கப்
படவேண்டும். புள்ளிகள் மூலம் அல்ல.
அது “அரசினால் திட்டமிடப்பட்ட ஒரு மோசடி” – என்றும் அவர் குறிப்பிட்டுள்
ளார். இழந்த ஒரு புள்ளியை மீளப் பெற
சில சமயம் 250 – 300 ஈரோக்கள் வரை
பிடிக்கிறது. அது மொத்தமாக அரசுக்கு 75 மில்லியன் ஈரோக்களைக் கொடுக்கிறது.
அது ஒரு மோசடி- என்கிறார் அவர்.
நகரங்களின் வீதிகளில் வாகன வேகத்
தை மணிக்கு 30 கி. மீற்றர்களாக மட்டுப்
படுத்துகின்ற திட்டங்களையும் தடைசெய்
யவேண்டும் என்று எரிக் செமூர் கேட்டி
ருக்கிறார். வேகமாகச் செல்ல வேண்டிய தேவை இல்லாத-நகரங்களின் மையங்க
ளில் வசிப்பவர்களால்-எடுக்கப்படுகின்ற
வேகத் தடைத் தீர்மானங்கள் இவை
என்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பத்திரிகையாளரும் தீவிர வலது சார்பு விவாதவியலாளருமாகிய
எரிக் செமூர் அண்மைய நாட்களாக நாட்
டின் அதிபர் தேர்தல் களத்தினுள் புகுந்து
கலக்குக் கலக்கி வருகின்றார். ஆனால்
தேர்தலில் போட்டியிடப் போவதை அவர்
இன்னமும் அறிவிக்கவில்லை. அந்த எண்ணம் தனக்கிருப்பதாகக் கூறிவரு
கிறார். அவர் பங்குபற்றும் நிகழ்ச்சிகள்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் போன்று
மாறிவருகின்றன. அவற்றில் மக்கள்
கூட்டம் அலைமோதுகின்றது.
பிரான்ஸில் வளர்ந்துவரும் தீவிர வலது
சாரி மார்க்கத்தின் புதிய-கவர்ச்சிகரமான
முகமாகத் தோன்றியுள்ள எரிக் செமூர்,
மற்றொரு தீவிர வலது சாரித் தலைவி
யாகிய மரின் லூ பென்னை முந்திக்கொண்டு தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.
23-10-2021