பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் 2021

0
772

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ,கேணல் பரிதி ஆகியோரின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகள் 2021 மற்றும் மாவீரர்கள் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் இறுதிப்போட்டிகள் 2021 இன்று 24.10.2021(ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணிக்கு Créteil Pompadour பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்றன.

பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பக்குழு பெண்கள் அமைப்பின் துணைப்பொறுப்பாளர். திருமதி. மெரின்சி செல்வா அவர்கள் ஏற்றி வைக்க பிரெஞ்சு தேசியக்கொடியினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் திரு. கிருபா அவர்களும், தமிழீழ தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர், மாவீரர் துரியோதனன் அவர்களின் சகோதரரும் ஏற்றிவைத்தனர். மாவீரர்கள் பக்கி மற்றும் பரதா அவர்களின் சகோதரர்,மாவீரர் துரியோதனனின் சகோதரர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைய போட்டிகள் பற்றி ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் செயலாளர் திரு. ஜெயந்தன் விளக்கியிருந்தார்.
இன்றைய உதைபந்தாட்ட போட்டியில் மாவீரர்களை மகிமைப்படுத்தும் வகையில் பின்வரும் உதைபந்தாட்ட கழகங்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தன.

1.பாரதி வி.கழகம் 2..யாழ்டன் வி.க
3.வல்வை புளூஸ் வி.க
4.சென் பற்றிக்ஸ் வி.க
5.அரியாலை வி.க
6.FC நெவ் 3 வி.க
7.பாடுமீன் வி.க
8.றோமியோ நவம்பர் வி.க
9.விண்மீன்கள் வி.க 10,கிங்ஸ்ரார் வி.கழகம்.
11.CST 93 வி.க

ஆகிய கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here