ஏறாவூரில் காவல்துறையின் அடாவடிக்கு முன்னணி கண்டனம்!

0
178

ஏறாவூர் காவல்துறை பொதுமக்களைத் தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

ஏறாவூரில் இரு இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை (23) வெளியிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் மைலம்பாவெளி பகுதியில் நேற்றைய தினம் இரு இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு போக்குவரத்து பொலிசார் ஒருவரால் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற் கொண்டிருந்தார் உண்மையிலே இந்த மூர்கத்தனமான தாக்குதலை முதலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது

அதேவேளை மாவட்டத்திலே அப்பாவிகள் மீது இப்படி பொலிசாருடைய அடாவடித்தனங்கள் இடம்பெற்றுவருகின்றது அண்மையிலே வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டனர் அதேவேளை இருதயபுரம் பகுதியில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு சட்டம் இருக்கத்தக்கதாக மனித உரிமை மீறல்கள் மனித குலத்துக்கு எதிரான சம்பவங்களை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

இவ்வாறே தொடர்ந்து பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது இந்த தாக்குதல்களை பார்க்கும் போது சம்பவங்களை பொலிசார் கையாளத் தெரியாது தங்களுக்கு ஏற்ற விதத்தில் கையாளுகின்றார்கள்.

எனவே மாவட்டதிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் பொலிசாரை சிறந்த முறையில் வழிநடாத்த தவறியதலாலும் மனித உரிமையை பாதுகாத்தல்;, பொதுமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் தொடர்பாக பொலிசாருக்கு பயிற்சி அளிக்கப்படாதனாலேயே இவ்வாறு பொலிசார் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.

வடக்கு கிழக்கிலே பொலிசார் நீண்ட நாட்களாக இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது எனவே இப்படியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.  இந்த  சம்பவத்தில் தொடர்புடையவருக்கு எதிராக  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் பாதிக்கப்பட இளைஞர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை இப்படியான சம்பவங்கள் இனிமேல் இடம்றெதாது என பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தவேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here