இந்தியப்படையால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் இன்று அமைதியான முறையில் நினைவேந்தப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என 21பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ம் ஆண்டு நினைவேந்தலே இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் இடம்பெற்றது. இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப்.ஜெனரல் டெப்பிந்தர் சிங் தெரிவித்தார்.
இத்தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லை.