நாட்டின் வடக்கு மாவட்டங்களில் கடும் புயல் வீசி வருகிறது. அதன் தாக்கம் தலைநகர் பாரிஸ் அடங்கலாக இல்-து-
பிரான்ஸ் பிராந்தியத்திலும் உணரப்படு
கிறது.
ஊரோரா (Aurora) எனப் பெயரிடப்பட்ட
புயல் காற்று நேற்று மாலை முதல் வடக்கு மாவட்டங்களை தாக்கி பல சேதங்
களை ஏற்படுத்தி உள்ளது. அது இன்று
அதிகாலை கிழக்கு நோக்கி நகர்ந்ததால்
பாரிஸ் பிராந்தியத்திலும் பலத்த காற்று
வீசி வருகிறது.
பிரான்ஸின் காலநிலை அவதான நிலையம் Calvados, Seine-Maritime, Eure, Somme, Oise, the departments of Ile-de-France (Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis , Val-de-Marne, Essonne, Yvelines, Val-d’Oise, Seine-et-Marne), Aisne, Marne, Ardennes, Meuse அடங்கிய 17 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் புயல் எச்சரிக்கை (vigilance orange) விடுத்திருக்கிறது.
மேல் நோர்மென்டி (Upper Normandy) பகு
திகளில் தொடங்கிய புயல் அங்கிருந்து
கிழக்கே மணிக்கு ஆகக் கூடியது 175 கி.
மீற்றர் வேகத்தில் நகர்ந்துள்ளது. மின்,
தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்
துக்கள் தடைப்பட்டுள்ளன.
நள்ளிரவுக்குப் பின் இன்று அதிகாலை
வரை ஏற்பட்ட சேத விவரங்கள் முழுமையாக இன்னும் தெரியவரவில்லை.
குமாரதாஸன். பாரிஸ்.
21-10-2021