நாளாந்தத் தொற்று ஒரு லட்சமாக
அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை!
உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறை
வடைகின்ற நிலையிலும் அதன் மாறுபா
டைந்த திரிபுகள் தொடர்ந்தும் தலையெ
டுத்து வருகின்றன.
ஐரோப்பாவில் வைரஸ் பரவலுக்குச் சாதகமான குளிர்கால நிலை தொடங்கு
வதால் வரும் நாட்களில் தொற்றாளர்கள்
எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் கடந்த ஒரு வார காலமாகத்
தினசரி தொற்றாளர்களது எண்ணிக்கை
நாற்பது ஆயிரத்துக்கு மேல் பதிவாகி
உள்ளது. கடைசியாக நேற்று அந்த எண்
ணிக்கை 49,139 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜேவிட் (Sajid Javid) பிரதமரின் டவுணிங் வீதி அலுவலகத்தில் இன்று நடத்திய
செய்தியாளர் சந்திப்பின் போது நாடு
குளிர்காலத்தில் புதியதொரு தொற்று
அலையைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கை
யை விடுத்தார். பனிக் காலத்தில் ஒரு
நாள் தொற்று ஒரு லட்சம் வரை அதிகரிக்
கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர்
தெரிவித்தார்.
பனிக் காலப்பகுதியில் முன்னெடுக்க
வேண்டிய மாற்று சுகாதாரத் திட்டம்
ஒன்றை(Covid Plan B)பிரிட்டிஷ் அதிகாரி
கள் தயாரித்து வருகின்றனர். மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விதிகளை மற்றொரு தடவை இறுக்கமாக நடைமு
றைப்படுத்துவது உட்பட பல வழிமுறை
கள் அதில் அடங்கியுள்ளன.
தொற்றாளர் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ள போதிலும் கடந்த
குளிர்காலப் பகுதியில் நிகழ்ந்தமை
போன்று உயிரிழப்புகள் இன்னமும்
அதிகரிக்கவில்லை. தடுப்பூசிகள் நன்கு
செயற்படுவதையே இது காட்டுகின்றது
என்று அமைச்சர் சஜித் ஜேவிட் சுட்டிக்
காட்டினார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்ரா
வைரஸ் திரிபின் இன்னொரு வடிவமே
தற்சமயம் பிரிட்டனில் பரவிவருவதாகக்
கூறப்படுகிறது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சமூக இடைவெளி உட்பட
சகல கட்டுப்பாடுகளையும் நீக்குகின்ற
அறிவிப்பை “Freedom Day” என்ற பெயரு
டன் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அறிவி
த்திருந்தார். அதன் பிறகு நாடு முழுவதும்
முழுமையான இயல்பு நிலை போன்று
கட்டுப்பாடற்ற தன்மை காணப்பட்டது.
பிரான்ஸுடன் ஒப்பிடும் போது பிரிட்ட
னிலும் சனத் தொகையில் 73 வீதமான
வர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையா
வது பெற்றுள்ளனர். ஆயினும் அங்கு
தொடர்ந்தும் தொற்றாளர்களது எண்ணி
க்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸில்
நாளாந்த தொற்றுக்கள் 4ஆயிரத்து 500
ஆக உள்ள நிலையில் பிரிட்டனில் அது பத்துமடங்கு அதிகமாகக் காணப்படுகி
றது.
ஜரோப்பாவில் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் முன்னெடுப்புகளை முதலில் ஆரம்பித்த
நாடு பிரிட்டனே ஆகும். ஆனால் சொந்த
தயாரிப்பாகிய அஸ்ராஸெனகா தடுப்பூ
சியின் எதிர்ப்புத் திறன், ஏனைய பைஸர்
போன்ற மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசி களது திறனை விடக் குறைவானது என்
பது ஆய்வுகளில் தெரியவந்திருந்தது.
புதிய திரிபுகளின் தொற்றை எதிர்ப்பதில்
அஸ்ராஸெனகா தடுப்பூசியின் செயற்றி
றன் குறைவாக இருப்பதால் மூன்றாவது
ஊக்கித் தடுப்பூசி ஏற்றும் திட்டமும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
20-10-2021