சுவிஸ் நாட்டில் இருந்து பிரான்சு பாரிசில் குடும்ப நிகழ்வொன்றில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருகைதந்த தமிழ்க் குடும்பம்ஒன்றின் அனுபவப் பகிர்வு இது….
எங்களின் அசண்டையீனம்.
உங்களின் அவதானத்திற்காக………
பிரான்ஸில் கடந்த 18.10.2021 நடந்த.
அந்த சம்பவம் எல்லாமே போச்சென்று
மனம்… ஒரு கணம்……..
சரிந்து போன நிமிடங்கள் அவை.
“மதியம் சாப்பாட்டுக்காக” disny “
சாப்பாட்டுக்கடையில் நண்பர்களோடு
உட்கார்ந்து சாப்பிட்டுமாச்சு..
பள்ளித்தோழர்களை கண்டால் மனம்.
இறக்கை கட்டி பறக்கத்தொடங்கிவிடும்.
ஆதலால்………..
இன்னும் ஒண்டுறண்டு மணித்தியாலம் “லாட்சப்பிலில் நண்பர்களோடு.
நிப்பம் என்டும் முடிவாச்சு…….
ஒரு “கிரைன்டர் “அதை கொண்டு
வைச்சிட்டு வாறன் என்று எங்களை
கூட்டி வந்த தம்பி காரை நோக்கி போனான்.
சில நிமிடங்களில் போன் பண்ணி..
கத்தினான் “டிக்கிக்க”கிடந்த சூட்கேஷை காணேல டிக்கி கதவு
எல்லாம் திறந்து கிடக்கு….
அதுக்க ஏதும் நகை கிடந்ததா என்று..
ஒரு கணம் தலைமட்டுமல்ல இந்த.
பூமியே சுத்திச்சுழன்டது கண்முன்னே.
ஏனென்டால் தாலிக்கொடி காப்பு சங்கிலி நெக்லேஸ் என்று எல்லா நகையும் ஒரு சூட்கேஷில் அதுக்குள்ளதான் இருந்தது .
ரெலிபோனே என்னையறியமால் கீழே விழுந்தது அந்தப்பையன் கத்துறான் அங்கிருந்தபடி
தலையெல்லாம் இறுகிவிட்டது.
காரடிக்கு போய் பாக்கவே விரும்பவில்லை விறைச்சபடியே. அசைவேதுமின்றி.
அந்தக்கடையில் இருந்து விட்டோம்.
கூடவே வந்த நண்பர்கள் ஆறுதல்படுத்தி கூட்டிப்போனார்கள்…
அங்கே ஒரு சூட்கேஷ் ஏனைய சாமான்களும் களவாடப்பட்டிருந்தன.
மற்ற சூட்கேஷ் திறந்து எல்லாமே களவாடப்பட்ட நிலையில் ஒரு சாறியுடன் திறந்து கிடந்தது ..
என் உமா கை படபடக்க
அந்த சூட்கேஷின் மேல்ப்புறமாக இருந்த
சிப்பை திறந்து பார்த்தாள்
வைக்கப்பட்ட நகையல் அப்பிடியே இருந்திச்சு. ஒரு கணம் ஆனந்தத்தில்
என்ன செய்வதென்று தெரியாமல் மனம் ஆர்ப்பரித்தது அதுக்குள்ளே.
எஞ்சியது ஒரு சாறியும் நகையும்.
குருவிக்கூடு போல சிறுக சிறுக
சேர்த்தது எல்லாமே போச்சென்று.
இனியெல்லாம் பூச்சியத்திலிருந்தே
ஆரம்பிக்கனும் என்று மனம் வெந்து
வெடித்தது …அந்தக்கணங்கள்.
ஆனாலும் எந்தவழிப்பயணங்களிலும்
என் அன்னை காளி துணையிருந்தவள் துணையிருப்பாள் என்ற நம்பிக்கை எப்பவும் எனக்குள் இருக்கு அது வீண்போகவில்லை ………….
எங்களின் அசண்டையீனத்திற்கு ஒரு எச்சரிக்கை என்பதை உணர்த்தியது.
இந்த திகில் அனுபவம்….
“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு……………………..
நன்றி கடவுளே…….
(செல்வா கவிதரன்)