யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டியில் வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 5 காவல்துறையினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள், ஐந்து பேரும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மீண்டும் காவல்துறை சேவையில் இணைக்கப்பட்டனர்.
இன்றுவரை இவர்களின் படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.