யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிா் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்
போர் சூழலில் யாழிலிருந்து, துணிவாக ஊடகப்பணியாற்றிய இவர், பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தமை
குறிப்பிடத்தக்கது.