இத்தாலி பலெர்மோ நகரில் சிறப்பான பட்டத்தைப் பெற்ற ஈழத் தமிழ்ப் பெண்மணி!

0
553

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி. வினுசா அவர்கள் இன்று 15.10.2021 பலெர்மோவில் Universita degli Studi di Palermo   பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை) இதற்க்காக நடைபெற்ற தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக செல்வி. வினுசா பாலசிங்கம் தெரிவாகியுள்ளார். இவருக்காக சிறப்பான பட்டமளிப்பையும்> மதிப்பளித்தலையும்>   Prof. Lo Verde Massimo அவர்களும் Prof.ssa Perra Alessandra> Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் செல்வி. வினுசா விற்கு பட்டமளித்து மதிப்பளித்திருந்தனர். பட்டமளிப்பில் கலந்து கொண்ட பலநூறு மாணவர்களில் எம்தேசப்புதல்வி சிறப்பான பட்டத்தை பெற்றுக்கொண்டமை இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இத்தாலி நாட்டில் பலெர்மோ நகரில் பிறந்த இவர் தன் தமிழ் மொழியோடு> பண்பாடு கலாசாரம் பேணி திலீபன் தமிழ்ச்சோலையில் ஆண்டு 7 வரை தமிழ் கற்றதுடன் அங்கும் சிறந்த மாணவியாக இருந்துள்ளார். தன் தாய்மொழியை சரளமாகப் பேசவும்> எழுதவும் தெரிந்தவர் இவர் தன் மொழியில் அளவுகடந்த பற்றும் கொண்டவர். பல சமூகத்தின் பணிகளிலும்> இளையோர்கள் பணியிலும் தன்னை ஈடுபடுத்தியும் வந்துள்ளார் அதே நேரம் இவர் இத்தாலி மொழியிலும் திறம்படப் படித்து தான் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்துளார் என்றும் இத்தாலி மக்களாலும் மதிப்பாக பார்க்கப்பட்டதுடன் அவர்களின் வாழ்த்துதல் களையும் இன்று பெற்றிருக்கின்றார்.

தாயகத்தில் கல்வியே தமது வாழ்வாகவும்> உன்னதமாகவும்> இனத்தின் உயர் வழிகாட்டியாக மேன்மையுடன் மூலதனமாக தமிழர்கள் வாழ்ந்ததை பொறுக்க முடியாததால் கல்வி> வேலைவாய்ப்பு என்றும் அனைத்து துறைகளிலும் பேரினவாதம் காட்டிய பாகுபாட்டால் வெகுண்டெழுந்த தமிழினம் உயிர்கொடைப் போராட்டமாக மாற்றமடைந்ததால் பேரினவாதத்தின் தமிழ் உயிர் பறிப்பிலிருந்து தம்முயிரை காப்பாற்ற புலம்பெயர்ந்து போன தமிழர்கள் பலர் வசதியும்> அரசஉதவிகளும்> சலுகைகளும் கொண்ட பலநாடுகளுக்கு புறப்பட்டாலும் பொருளாதார தன்னிறைவில் ஏனைய ஐரோப்பிய நாடுகள் போல் இத்தாலி தேசம் இல்லாவிட்டாலும் தன்னிறைவோடு சென்று கொண்டிருக்கும் இத்தாலி நாட்டிற்கு சென்றடைந்த மக்கள் ஒரு பகுதியினர் தமது வசதியைப்பயன்படுத்தி வேறுநாடுகளுக்கு சென்றபோதும் இத்தாலியே எமக்கு போதும் என்று தங்கிவிட்டவர்களும் உண்டு. தங்கள் தாயக வாழ்வில் அனுபவிக்காத வாழ்வை இங்கு வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் பலர் மீண்டும் தமது குழந்தைகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். ஆனால் இத்தாலியில் வாழ்ந்த மக்கள் தமது குழந்தைகளை அந்தநாட்டின் மொழியில் கற்கவைத்து அதே நேரம் தமது தாயமண்ணைப்பற்றியும் உணர்த்தியே வளர்த்து வருகின்றனர்.

ஒரு மொழி என்பது சத்தம் மட்டுமே ஆனால் மொழியை நாம் தெரிந்து கொள்ள ஏதோவொரு மொழியைத் தெரிந்து கொள்ளவே வேண்டும். கற்றிருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். அந்த வகையில் தான் பிறந்த மண்ணின் இத்தாலிய மண்ணுக்கும், தன் தாய் மண்ணான ஈழமண்ணுக்கும், செல்வி. வினுசா பாலசிங்கம் அவர்கள் இன்று பெருமை சேர்த்து தந்திருக்கின்றார்.

தனது தாய் தந்தையருக்கும், தன்னை உருவாக்கிய ஆசிரியர்கள், உற்றார் உறவினருக்கும் இத்தாலி நாட்டில் முதற்தடவையாக தனது பண்டத்தரிப்பு வாழ் மக்களுக்கும் பெயரையும், உயர்வையும் இவர் பெற்றுக்கொடுத்துள்ளார். வந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று தமிழர்கள் நாம் இல்லாது ஒரு வரலாற்றையும் படைக்கின்றோம், இன்னும் படைப்போம் என்று உருவாகிக் கொண்டிருக்கும் அனைத்து எம்தேச எதிர்கால சிற்பிகளுக்கும் நாம் இதயபூர்வமான வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் வழங்குகின்றோம்.

பரப்புரை மக்கள் தொடர்பாளர் – இத்தாலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here