நோர்வே நகரில் நடந்த கொடூரம் அம்பு-வில்லு கொண்டு தாக்கி ஐவரைக் கொன்ற நபர் கைது!

0
141

37 வயதான டென்மார்க் பிரஜை
புரிந்த பயங்கரவாதச் செயலா?

நோர்வே நாட்டின் அமைதியான நகர் ஒன்றில் நடந்த மிக மோசமான தாக்குதல்
சம்பவத்தில் ஐந்து பேர் அம்பு எய்து
கொல்லப்பட்டிருக்கின்றனர். இருவர்
காயமடைந்துள்ளனர். அம்பு – வில்லுடன்
தோன்றித் தாக்குதல் நடத்திய நபர் 37
வயதான டெனிஷ் பிரஜை என்று தகவல்
வெளியாகி உள்ளது.

நோர்வேயின் தென் கிழக்கே Kongsberg என்னும் நகரில் நேற்ற் மாலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் தனியாள் என்றும்
அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்
பதையும் பொலீஸ் பேச்சாளர் ஒருவர்
உறுதிப்படுத்தியுள்ளார்.கைதின் போது காயமடைந்த அவர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது ஒரு பயங்கரவாத நோக்கம் கொண்ட தாக்
குதல் என்றே பொலீஸார் சந்தேகிக்கின்
றனர்.

பொலீஸ் கொமாண்டோக்கள் Kongsberg நகரில் தாக்குதல் நடந்த பிரதேசத்தை
உடனடியாக மூடி முடக்கினர். மக்கள் வீடு
களில் தங்கியிருக்குமாறு கேட்கப்பட்ட
னர்.

நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள
சுப்பர் மார்க்கெட் (Coop Extra supermarket)
ஒன்றிலேயே முதலில் பலர் தாக்குதலு
க்கு இலக்காகினர் என்று கூறப்படுகிறது
தாக்குதலாளி பின்னர் நகரின் வேறு பல பகுதிகளிலும் அம்பு வில்லு மூலம் பல ரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்
களை தொலைக்காட்சிகள் வெளியிட்டி
ருக்கின்றன.

காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்
எட்டு அம்புலன்ஸ் வாகனங்களும் மூன்று
அம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர்களும்
ஈடுபடுத்தப்பட்டன. ஆட்கள் பாதுகாப்பாக
இருக்கின்றனரா என்பதை அறிவதற்கு பொலீஸார் வீடுகளது கதவுகளைத் தட்டி
விசாரித்து வருகின்றனர் என்ற தகவலை
நகர வாசி ஒருவர் ஊடகங்களிடம் தெரி
வித்துள்ளார்.நகரம் எங்கும் ஆயுதம் தரித்த பொலீஸார் பெரும் எண்ணிக்கை
யில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg)
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியும் துயர
மும் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்
கிறார்.

நோர்வேயில் பத்து ஆண்டுகளுக்கு முன்
னர் உத்தோயா தீவில்(island of Utoya)
நபர் ஒருவர் எழுபது பேரைக் கொன்ற
படுகொலைக்குப் பிறகு நடந்திருக்கின்ற
மோசமான தாக்குதலாக இந்தச் சம்பவம்
கருதப்படுகிறது.

பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில்
பொலீஸார் துப்பாக்கியுடன் பணி புரிவ
தில்லை. நேற்றைய சம்பவத்தை அடுத்து
சகல பொலீஸ் பணியாளர்களும் ஆயுதம்
வைத்திருக்க வேண்டும் என்று நோர்வே பொலீஸ் தலைமையகம் உத்தரவிட்டிருக்
கிறது.

(படங்கள் :Aftenposten செய்தி நிறுவனம்)

குமாரதாஸன். பாரிஸ்.
14-10-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here