காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிறிலங்கா காவல்துறை அதிகாரி கொட்டாச்சி அவர்கள் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே பாதணிகளைக் கழட்டாது, ஆலயத்துக்குள் பிரவேசம் செய்துள்ளார்.
யாழிற்கு இன்று விஜயம் செய்த சிறிலங்கா காவல்துறை அதிபர் உள்ளிட்ட குழுவினருடன் சென்றவேளை, ஏனையோர் பாதணிகளை கழட்டி விட்டு சென்ற வேளை குறித்த அதிகாரி பாதணியை கழட்டாது ஆலயத்துக்குள் பிரவேசித்து ஆலய மகிமையை அவமதிப்பு செய்துள்ளமை இந்துக்கள் மத்தியில் கவலையை தோற்றிவித்துள்ளது.