சுமார் 600 பேருடன் சென்ற தஞ்சக்கோரிக்கை படகொன்று மத்தியதரைக் கடலில் மூழ்கியதில் பலரும் காணாமல்போயிருப்பதாக அஞ்சப்படுகிறது. எனி னும் மேலும் எவரும் உயிருடன் மீட்கப்பட முடியும் என்று நம்பவில்லை என மீட்பாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டபோதும் 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிக ளுக்கான நிலையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 25 சடலங்கள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடலோர படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதில் எத்தனைபேர் காணாமல்போயுள்ளனர் என்று உறுதியாகவில்லை.
மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவை எட்டும் முயற்சியில் 2015 ஆம் ஆண்டில் 2000 க்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆட்களை நிரப்பிய மீன்பிடிப்படகு லிபிய கரையில் இருந்து சுமார் 15 மைல்கள் தொலைவிலேயே நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மீனவப் படகில் இருந்து வந்த முதலாவது அபயக் குரல் இத்தாலியின் சிசி தீவுக்கு கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அயர்லாந்து கப்பற்படை பட கொன்றில் முதலில் சென்றபோது மீன்பிடிப்படகில் இருந்தவர்கள் ஒரு பக்கத்தி ற்கு ஒன்று குவிந்ததால் படகு சரிந்து கவிழ்ந்துள்ளது. உயிர்தப்பியோரை தேடும் பணியில் ஏழு கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட் டுள்ளன.