குளிர்காலத்தில் பரவுகின்ற சுவாசத் தொற்று நோய்கள் இந்த முறை மிகத்
தீவிரமடைவதற்கு வாய்ப்புள்ளதாக
அறிவியல் ஆலோசனைச் சபை(Scientific Council) எச்சரித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கார
ணமாக கடந்த ஆண்டில் மிகவும் தணிந் திருந்த சளிச்சுரம் (influenza) மற்றும் ஆர்.எஸ்.வி(RSV – respiratory syncytial virus) ஆகிய இரண்டு சுவாசத் தொற்று வைர ஸ்கள் மீண்டும் இந்தக் குளிர் காலத்தில்
தீவிரமாகப் பரவலாம் என்று அறிவியல்
சபை கவலை வெளியிட்டிருக்கிறது.
சுவாசத் தொகுதியைத் தாக்குகின்ற
ஆர்.எஸ்வி (respiratory syncytial virus)
வைரஸ் இந்த ஆண்டு ஒக்ரோபர் – நவம்
பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி – பெப்
ரவரி வரை பெரிய அளவில் பரவலாம்
என்று அறிவியல் ஆலோசனைச் சபை
கடைசியாக வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்
கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்தவர்களை விட குழந்தைகளை
அதிகம் தாக்குகின்ற இந்த சுவாச நோய்
க்குத் தடுப்பு மருந்து எதுவும் கிடையாது.
சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடு
களே அதன் தொற்றுக்களைக் குறைக்
கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிதல், ஒருவரோடு ஒருவர்
நெருங்காமல் இடைவெளி பேணல், கை
களை அடிக்கடிச் சுத்திகரித்தல் போன்ற
சுகாதாரப் பழக்கங்கள் கொரோனா
வைரஸை மட்டுமன்றி தடிமன் காய்ச்சல்
இருமல், தும்மல் என வேறு பல நோய்க
ளுக்கான வைரஸ்களையும் கட்டுப்படுத்
தியிருந்தன. அந்த சுகாதார விதிகள் தற்
சமயம் முற்றாகக் கைவிடப்பட்டுவிட்டன.
மக்களது நெருக்கமான செயற்பாடுகள்
காரணமாக சுவாச நோய்கள் மீண்டும்
தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
சளிக் காய்ச்சல் மற்றும் சுவாசக் குழாய்
அழர்ச்சி போன்ற நோய்களால் அவதியு
றுவோரது எண்ணிக்கை கடந்த சில நாட்
களாக அதிகரித்துள்ளது என்பதை மருத்
துவமனை வட்டாரங்களும் உறுதிப்படுத்
தியுள்ளன. குறிப்பாக இரண்டு வயதுக் குக் குறைந்த குழந்தைகள் சுவாசக் குழாய் அழர்ச்சியால் (bronchiolitis) பாதிக்
கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவுகளுக்கு
வருவது அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
குமாரதாஸன். பாரிஸ்.
11-10-2021