சவூதி அரேபியாவில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
யெமன் எல்லையை ஒட்டியிருக் கும் அபாஹ் நகரில் உள்ள பாது காப்பு படையினர் அதிகம் பயன் படுத்தும் பள்ளிவாசலே தாக்குத லுக்கு இலக்காகியுள்ளது. தற் கொலைதாரி தான் அணிந்து வந்த தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்தே இந்த குண்டு தாக்குதலை நடத்தியதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
கடந்த மே மாதம் சவூதியில் ஷியா பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு பொறுப்பேற்றிருந்தது. சவூதி அரேபியா அண்டை நாடான யெமனில் ஷியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களையும் நடத்தியது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்றிருக்கும் தாக்குதலில் பாதுகாப்பு படையி னரே கொல்லப்பட்டிருப்பதாக சவூதி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு விரைவில் எவரும் பொறுப்பேற்றிருக்கவில்லை.