முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரனின் கொலை குறித்த வழக்கினை விசாரிப்பதற்கு இன்று (06) திகதி குறிப்பிட்டுள்ளது.
அதன்படி ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல், வாரத்தின் திங்கள் முதல் புதன்கிழமை வரை வழக்கிற்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. விசேட நீதிபதிகள் குழாம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் சந்தேகநபர்களாக ஐ.ம.சு.மு.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மேலும் 13 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் 10ஆவது சந்தேகநபர் இல்லாமலேயே இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சந்தேகநபர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் காணாமல்போனமை குறித்த வழக்கு கடுவெல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜராகியதோடு அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் கொலை, காயப்படுத்தியமை, கொலைக்கு ஒத்துழைத்தமை உள்ளிட்ட 17 குற்றங்களுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என குறிப்பிட்டனர்.
பிணை வழங்கப்பட்ட 3ஆவது சந்தேகநபர், பிணை விதிகளை மீறியதால் ஒக்டோபர் 12 வரை தொடர்ந்தும் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.