கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் ஹிரோஷிமாவின் சரித்திரத்தையே மாற்றியமைத்த நினைவலைகளுடன் இன்று காலை சூரிய உதயம்,மக்கள் மனங்களில் உதித்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது வீசப்பட்ட இரண்டு அணு குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்ட்ட நகரங்களில் ஒன்றே ஹிரோஷிமா.
ஐக்கிய அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரம் உலக வரலாற்றில் கறை படிந்த மிகப் பாரிய பேரழிவாகும்.
முற்றுமுழுதாக பொது மக்களை கருத்தில் கொண்டு நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகளவான மக்கள் உயிரிழந்தனர்.
அணுகுண்டால் ஏற்பட்ட நேரடி தாக்கம் மற்றும் அதன் பின்னரான கதிர் வீச்சுமே உயிரிழப்புகளுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கறை படிந்த சம்பவத்தில் தாம் இழந்தவற்றை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகள் ஜப்பானில் முன்னெடுக்கப்பட்டன.
ஹிரோஷிமா நகரில் நடத்தப்பட்ட அணு குண்டு தாக்குதலை தொடர்ந்து மூன்று நாட்களின் பின்னர் நாகசாகியிலும் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் அதன் பின்னரான காலப்பகுதியில் தொடர்சசியான முயற்சியால் ஜப்பான் எண்ணிப் பார்க்க முடியாதளவில் வளர்ச்சியடைந்ததுடன் பொருளாதார சந்தையில் தன்னிகரற்று விளங்குகின்றது.