
குசான்வீல் நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகி சிறிகாந்தராசா ஜெயந்திமாலா அவர்களின் அன்புத்துணைவர் சிறிகாந்தராசா குமாரசாமி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றுள்ளது தமிழ்ச்சோலைக் குமூகம்.
1999 ஆம் ஆண்டில் குசான்வீல் தமிழ்ச்சங்கத்தின் உருவாக்கத்திற்காய் முன்னின்றுழைத்து, அதன் உப-தலைவராக நீண்டகாலம் பணியாற்றி, இத்தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்காய்த் தீராப்பற்றுடன் செயலாற்றிய தன்னார்வலர் இவர்.
எம் இனம் தன் மொழியையும் கலைகளையும் பண்பாட்டையும் புலம்பெயர் வாழ்விலும் பேணிக்காக்க வேண்டும் என்ற உயர்சிந்தனையுடன் அர்ப்பணிப்புடன் உழைத்த இவருக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது; அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தவரின் துயரில் பங்கெடுத்துக் கொள்கிறது.
