பாகிஸ்தானில் நிலநடுக்கம்:20பேர்வரை பலி; 150 பேருக்கு மேல் காயம்!

0
602

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட 5.7 – 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இவ்வனர்த்தத்தில், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்து நொறுங்கியதால் அதற்குள் சிக்கியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வனர்த்தத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here