கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜோன் பீற்றர்ஸ் றீகன் (வயது – 33) என்ற இளைஞரே நேற்றுப் புதன்கிழமை மதியம் இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
ஓட்டோவில் வந்த நால்வர், குறித்த இளைஞரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை நகரிலுள்ள இறைச்சிக்கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகனுடன் வணக்கஸ்தலத்திற்கு சென்று ஓட்டோவில திரும்பிக் கொண்டிருந்தவேளை அவர் நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், 46 வயதான குடும்பஸ்தர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டோவில் வந்ததாகக் கூறப்படும் சிலர் குறித்த வர்த்தகரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்தள்ளார்.
இந்த இரு கொலை சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்