கொட்டாஞ்சேனை,ஜம்பட்டா வீதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த நான்கு சந்தேகநபர்கள் இந்த கொலையை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவத்தில் 33 வயதான ஜோன் பீற்றர் ரெக்ஸி ரீகன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சில வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை செய்த நபர்கள் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை இடைநடுவே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தற்போது சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் சகோதரர் ஒருவர் உயிரிழந்த நபரினால் இதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.