பிரான்சில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் நினைவுசுமந்த உதைபந்தாட்டப்போட்டி முடிவுகள்!

0
805


பிரான்சில் கடந்த ஞாாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களின் விபரம் வருமாறு:-


1ம்இடம்:-சென்பற்றிக்ஸ்
2ம் இடம்:- N.SParis
3ம் இடம்:-CST 93

உதைபந்தாட்டத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்,செயலாளர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விளையாட்டுத்துறை,மாவீரர் பணிமனை, கழகங்களின் பொறுப்பாளர்கள்,தலைவர்கள் வெற்றிப்பதக்கங்கள்,வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளித்தனர்.

கொடிய கோவிட் 19 இனால் பல லட்சம் உயிர்கள் பலி கொண்ட போதும் அதிலிருந்து மீண்டு, கடந்த காலங்களில் எவ்வாறு விளையாட்டுத்துறையின் ஊடாக எம் தேசம் அதன் விடுதலை, உயிர் தந்த உன்னத மாவீரர்கள் நினைவுகளோடு பயணித்தோமோ அதேபோலவே மீண்டும் உலகத்தமிழர்களின் பயணத்துடன் பிரான்சு வாழ் தமிழர்களினது பயணமும் ஆரம்பித்துள்ளது.

அதற்காக உழைத்து உறுதியோடு காத்திருந்து உழைத்த அனைத்துக்கரங்களையும் இறுகவே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனமும், தமிழர் விளையாட்டுத்துறையும் நன்றியோடு பற்றிக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here