உலகில் 50 இலட்சத்தை கடந்த கொவிட் மரணங்கள்!

0
347

நிமிடத்துக்கு 05 பேரும் தினமும் 8,000 பேரும் பலி

உலகளவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது. ரோய்ட்டர்ஸ் முன்னெடுத்த பகுப்பாய்வின்போது உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நிமிடத்திற்கு 5 பேரும், நாளாந்தம் சுமார் 8,000 பேரும் கொவிட் தொற்றால் மரணிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொவிட் பரவல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு வருடத்திற்கு மேலாக 25 இலட்சம் கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், எஞ்சிய 25 இலட்சம் கொவிட் மரணங்களும் 8 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் பெரும்பாலான மரணங்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளன.எவ்வாறிருப்பினும், கடந்த சில வாரங்களாக உலகளாவிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here