பிரான்ஸின் அரசியலிலும் வணிகம் விளையாட்டு, சினிமா,நாடகம், எனப் பல்வேறு துறைகளிலும் செல்வாக்கு மிகுந்தவராக விளங்கிய பேர்னார்ட்
ரப்பி (Bernard Tapie) இன்று தனது 78 ஆவது வயதில் புற்று நோயால் காலமா
னார்.
பிரபல விளையாட்டு ஆடைத் தயாரிப்பு
நிறுவனமாகிய அடிடாஸின் (Adidas) பங்குகள் உட்படப் பல தொழிற்றுறை களின் அதிபராக விளங்கிய ரப்பி கடந்த நான்கு ஆண்டுகளாக வயிற்றுப் புற்று
நோயுடன் போராடிவந்தார்.
1943 இல் பாரிஸில் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த ரப்பி, வறுமை நிறைந்த
புறநகர்ப்புற வாழ்வில் இருந்து தன்னை
வெளியேற்றி பிரான்ஸின் செல்வந்தர் களில் ஒருவர் என்ற நிலைமைக்கு உயர்ந்தவர். 1990 களில் அப்போதைய
பிரான்ஷூவா மித்ரோனின் (François Mitterrand) சோசலிஸ அரசாங்கத்தில்
நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்
சராக அரசியலில் நுழைந்தார். பின்னர்
பிரான்ஸ் மற்றும் ஜரோப்பிய நாடாளும
ன்றங்களின் உறுப்பினராகவும் விளங்
கினார்.
பாரிஸ் பெல்வீலில் (Belleville) தொலைக்
காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்வ
தில் தொடங்கிய அவரது வணிகம் பின்
னர் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள்
பலவற்றைப் பொறுப்பேற்றுப் பெரும்
வர்த்தக சாம்ராஜ்யம் ஒன்றை விரிவுபடு
த்தும் அளவுக்குப் பெருகியது.
பிரான்ஸின் முதல்தர உதைபந்தாட்டக்
கிளப்பான ஓஎம் எனப்படும் Olympique de Marseille அணியின் முன்னாள் தலைவ
ராக விளங்கிய அவர், 1993 இல் அந்த
அணி சம்பியன் லீக் பட்டத்தை வெல்வ
தற்கு வழிவகுத்தார். ஆனால் பின்னர்
ஆட்ட நிர்ணய பேரம் (match-fixing) ஒன்று தொடர்பான விவகாரத்தால் அவர் சிறை
செல்லவும் நேர்ந்தது.
ஜேர்மனியின் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு ஆடை உற்பத்தி நிறுவன
மாகிய அடிடாஸ் (Adidas) நிறுவனத்தை வாங்கிய அவர் சில ஆண்டுகளின் பின்
னர் அதனை அரசுக்குச் சொந்தமான Crédit Lyonnais வங்கிக்கு வலுக்கட்டாய
மாக விற்பனை செய்த விவகாரத்திலும்
பல சர்ச்சைகளில் சிக்க நேர்ந்தது. அது
தொடர்பான வழக்குகள் அவர் உயிரிழக்
கும் காலம் வரை நீடித்தன.
பேர்னாட் ரப்பியின் மறைவு Olympique de Marseille வீரர்களினது மனங்களில் ஒரு
வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது
என்றும் அவர் என்றைக்கும் Marseille
அணியின் ஜாம்பாவானாக விளங்குவார் என்றும் அந்த அணியினர் விடுத்துள்ள
அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
அதிபர் எமானுவல் மக்ரோன் மற்றும்
அவரது துணைவியார் பிரிஜித் மக்ரோன்
இருவரும் கூட்டாக விடுத்துள்ள அனுதா
பச்செய்தியில், பேர்னாட் ரப்பியின் லட்சி
யம், ஆற்றல், உற்சாகம் என்பன தலை
முறை, தலைமுறைகளாகப் பிரெஞ்சு மக்
களுக்கு உத்வேகம் அளிக்கின்றன என்று
தெரிவித்திருக்கின்றனர்.
“மலைகளை நகர்த்துவதற்கும் நிலாவை
வெல்லவும் போராடக்கூடிய வல்லமை
கொண்ட இந்த மனிதன், ஒரு போதும் தனது கைகளைக் கீழே விட்டதில்லை.
கடைசி நிமிடம் வரை புற்றுநோய்க்கு
எதிராகவும் போராடினான்” – என்று எலிஸே மாளிகையில் இருந்து மக்ரோன்
தம்பதியினர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இளவயதில் பாடகராகவும்
பின்னாளில் நாடகங்கள் தொலைக்காட்
சித் தொடர்கள், சினிமா எனப் பல கலை
த்துறைகளிலும் ஈடுபட்டமையால் ரப்பி
பரவலாகப் பல துறைசார்ந்தவர்களாலும்
ரசிக்கப்பட்ட ஒருவராக விளங்கினார்.
அதே அளவுக்கு அவரது வாழ்வில் இறக்
கங்களும் நீடித்தன. ஊழல் பேரங்கள்
சிறை என்று சரிவுகளைச் சந்தித்த
வேளைகளில் எல்லாம் தன் ஏற்றத்
தாழ்வுகளை ஏற்றுக் கொண்ட அவர்,
பெரும்பாலான பிரெஞ்சு மக்களால்
இன்றைக்கும் கவரப்படுகின்ற ஒரு
வராகத் திகழ்கிறார்.விளையாட்டு, திரை
துறை சார்ந்த பலரும் அரசியல் தலைவர்
களும் ரப்பிக்கு தங்கள் இறுதி அஞ்சலி
யைச் செலுத்திவருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது
இல்லத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்
தின்போது அவரும் அவரது துணைவியா
ரும் காயமடைய நேரிட்டது நினைவிருக்கலாம்.
குமாரதாஸன். பாரிஸ்.
03-09-2021