பாரிஸ் உட்பட பல பிராந்தியங்களில் புயல் மழை: இயல்பு நிலை பாதிப்பு!

0
141

நடமாட்டத்தைக் குறைத்து வீடுகளில்
தங்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் புயலுடன்கூடிய
பலத்த மழை பெய்துவருகிறது. பாரிஸ்
உட்பட 21 பிராந்தியங்களில் செம்மஞ்சள்
எச்சரிக்கையும் மேற்குக் கடற்கரையோர
Loire-Atlantique பிராந்தியத்துக்கு சிவப்பு
எச்சரிக்கையும் (vigilance rouge) விடுக்கப்
பட்டிருக்கிறது. புயல், வெள்ளம், இடிமின்
னல், பலத்த காற்றுடன் கூடிய மழை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று Météo France தெரிவித்துள்ளது.

பாரிஸ் உட்பட பல நகரங்களில் இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த “Nuit Blanche” எனப்படும் “வெள்ளை இரவு” கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பலவும் மோசமான காலநிலை காரணமாக ரத்துச் செய்யப்பட்டன.

இன்று சனிக்கிழமை தொடக்கம் நாளை
ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் கன
மழைக்கு வாய்ப்பிருப்பதால் பொதுமக்
கள் வீடுகளில் தங்கியிருப்பது பாதுகாப்
பானது என உள்துறை அமைச்சர் ஜெரா
ல்ட் டாமனா (Gérald Darmanin) எச்சரிக்கை
செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார்.

கடற்கரை மற்றும் நீர் நிலைகள், மின் இணைப்பு மார்க்கங்கள் போன்ற இடங்
களில் நடமாடுவதைத் தவிர்த்து இயன்ற
வரை விழிப்புடன் வீடுகளில் தங்கியிருக்
குமாறு அவர் விடுத்த செய்தியில் பொது மக்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்
டுள்ளது.

Seine-Maritime, Oise, Eure, Val d’Oise, Paris, Seine-Saint-Denis, Hauts-de -Seine, Val-de-Marne, Yvelines, Eure-et-Loir, Eure, Orne, Sarthe, Mayenne, Ille-et-Vilaine, Morbihan, Vendée, Maine-et-Loire, Loire, Ardèche, Lozère and Gard ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்
சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கைக் குறியீடுகளில் அதி உச்ச
அளவான சிவப்பு நிலை அறிவிக்கப்பட்
டிருக்கின்ற Loire-Atlantique பிராந்தியத்
தில் தீயணைப்பு மற்றும் அவசர உதவிப்
பிரிவுகள் முழு உஷார் நிலையில் வைக்
கப்பட்டுள்ளன.அங்கு மழை வெள்ளம்
காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்
பட்டுள்ளன. அங்கு 12மணி நேரத்தில்
100 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்
ளது.

Brittany, Normandy மற்றும் Pays de la Loire
பகுதிகளில் புயல் காரணமாக சுமார்
8ஆயிரம் வீடுகளுக்கான மின் விநியோ
கம் இன்று மாலை முதல் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
02-10-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here