இன்றுமகாத்மா காந்தியின் 152 பிறந்தநாளினை முன்னிட்டு பிரான்சில் rue André Laillié 93700 Drancy என்னும் இடத்தில அமைக்கப்பட்டு இருக்கும் மாகாத்மா காந்தியின் சிலைக்கு முன்பாக நினைவுகூரப்பட்டது.
அதிகம் தமிழ் மக்கள் வாழும் இந்த மாநகரத்தில் இன்று காலை மாநகர முதல்வர் அவர்கள் மற்றும் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் உறுப்பினர்கள், தமிழர் கட்டமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். உரைகளும் ஆற்றியிருந்தனர். இதில் அம்மாநக முதல்வர் M. Jean-Christophe Lagarde உரையாற்றும் போது இங்கு காந்தியின் நினைவை நினைவுகூரும் அதேவேளை ஈழத்தமிழ் மக்களின் மே 18 னையும் இந்த மாநகரத்தில் நாம் நினைவுகூர்ந்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். மழைக்குள் குளிருக்கும் மத்தியில் ஈழத்தமிழ் மக்கள், பாண்டிச்சேரி மக்கள், பிரெஞ்ச மக்கள் பலர் கலந்து கொண்டனர்.