வடமராட்சி அல்வாயில் குடிசைகளுக்குத் தீ வைத்த கும்பல்!

0
137

வடமராட்சி அல்வாய் பகுதியில் ரவுடிக் கும்பலினால் இரண்டு குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் வடக்கு மகாத்மா வீதியிலுள்ள குறித்த பகுதியில் கடந்த 2ஆம் திகதி அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலைச் சேர்ந்து ஒருவரினால் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவ் ரவுடிக் கும்பலை சேர்ந்த நபரை கடந்த சனிக்கிழமை (25) மாலை பருத்தித்துறை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஒருவர் அன்று இரவு கிராமத்துக்குள் புகுந்து குடிசைகளுக்கு தீ வைத்ததுடன் பல வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் இதனால் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here