கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது இவர் இம்ரான் – பாண்டியன் படையணியில் செயற்பட்டுள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.