தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5 அம்சக் கோரிக்கைகளினை இந்திய அரசிடம் முன்வைத்தவாறு தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணா 26.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் 12 நாட்கள் நீர் ஆகாரம் அன்றி அதி உச்ச தியாகத்தினை புரிந்தார். தமிழீழ விடுதலைக்காக நாம் வரித்துக்கொண்ட கொள்கை மாறாமல் அறவழியில் நின்று போராடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டு இன்றும் மக்கள் புரட்சி வெடிக்க சுதந்திரத் தமிழீழம் மலர பெரும் வரலாற்றுப் பசியோடு காத்திருக்கும் உன்னதனையும் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களையும் பெல்சியம் வாழ்மக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.I
எம் தமிழீழ மக்களே திலீபன் அண்ணா அதி உச்ச அறவழியில் போராடி வீரச்சாவினைத் தழுவும் நேரம் எல்லாம் உரைத்தது மக்கட்புரட்சி வெடிக்க வேண்டும் எம் தமிழீழம் மலரவேண்டும் என்பது தான். எனவே இவ்விடுதலைப் போராட்டத்தில் நாம் பார்வையாளர்களாக இருக்கமுடியாது . காலம் கனிந்து எமக்கான போராட்டத்தின் பலாபலனை எதிர்காலச் சந்ததி அனுபவிக்க நாம் நம்மை அறவழிப்போராட்டம் எனும் தமிழீழ போராட்ட வடிவத்தில் வரித்துக்கொள்ள வேண்டும். 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் அதற்காக நாம் வாழும் நாடுகளும் குரல்கொடுக்க வேண்டும் . நம்மில் தங்கியிருக்கும் இவ் வரலாற்றுக்கடமையினை உணர்ந்து தியாய தீபம் லெப் . கேணல் திலீபன் அண்ணாவின் இப்புனித நாளில் சபதம் எடுத்துக்கொள்வோம் வெகுவிரைவில் தமிழீழம் மீட்பதற்கான வழிமுறைகளில் மேலும் நம்மை ஈடுபத்துவோம் என்று. எனவே அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் அறவழிப் போராட்டங்களாக எம் இலக்கும் கொள்கையும் மாறாது எம் குரல்கள் ஒலிக்க வேண்டும். இதுவே நாம் எம் மாவீரர்களினை நெஞ்சில் சுமக்கும் அர்த்தமுள்ள செயலாகும்.