பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது.
இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
