பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கலைஞர் வேல்மாறன் அவர்களின் வணக்க நிகழ்வு!

0
656


தமிழர் தாயகத்தில் கோவிட் தொற்றுக் காரணமாக கடந்த 18.09.2021 சாவடைந்த ஈழத்தின் புகழ் பூத்த இசைக் கலைஞர் சதாசிவம் வேல்மாறன் (வயது 55) அவர்களின் வணக்க நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் இன்று (24.09.2021) வெள்ளிக்கிழமை 15.00 மணிக்கு கோவிட் விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வேல்மாறன் அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை வேல்மாறன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை வேல்மாறன் அவர்களின் சகோதரி செலுத்தியிருந்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நினைவுரைகளை வேல்மாறன் அவர்களுடன் தாயகத்தில் விடுதலை உணர்வோடு கலைப் பணியில் பயணித்த கலைஞர்களான திரு.செங்கதிர், திரு.இசைஅமுதன் ஆகியோரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் உணர்வோடு பல அனுபவங்களையும் பகிர்ந்திருந்தனர். குறித்த கருத்துக்கள் அனைவரையும் கண்ணீர் மழையில் நனைத்திருந்தன.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
சதாசிவம் வேல்மாறன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு கடந்த புதன்கிழமை தாயகத்தில் கோவிட் விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது.
ஈழத்தின் புகழ்பூத்த தபேலா, மிருதங்க வித்துவானும் ஆசிரியருமான சதா வேல்மாறன் அவர்கள், அதிகமான தமிழீழத் தேசிய கானங்களுக்கும் ஈழத்துப் பாடல்களுக்கும் அணிசேர் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
ஓ..மரணித்த வீரனே..,மாவீரர் யாரோ என்றால்.,மாவீரர் புகழ் பாடுவோம்.. போன்ற பல பாடல்களில் இவர் அணிசேர் கலைஞராகப் பணியாற்றியுள்ளமையும் .
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சதா வேல்மாறன் அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி பல தடவைகள் மதிப்பளிப்புச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here